Enable Javscript for better performance
ஒற்றை யானை அட்டகாசம்: காட்டுக்குள் விரட்ட கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஒற்றை யானை அட்டகாசம்: காட்டுக்குள் விரட்ட கோரிக்கை

    By பழனி,  |   Published on : 27th January 2015 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே பொருந்தல் பகுதியில் விளை நிலங்களில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனியை அடுத்த, கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. ஒற்றையானை ஒன்று இரவு நேரங்களில் விளை நிலங்களில் சுற்றித்திரிகிறது. வயல் வரப்பை உடைத்து செல்வது, தோப்புகளில் மரக்கிளைகளை உடைப்பது, தென்னங்கன்றுகளை சேதப்படுத்துவது என அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில், பொருந்தல், செம்மாட்டுப்பாதை, ரங்கசாமிகரடு உள்ளிட்ட பல பகுதிகளில் நெற்பயிர் பால்பிடித்துள்ள நிலையில், அதன் மணத்தை வைத்து யானைகள் வந்து விடுமோ என அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே, ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai