Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் 352 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் 352 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

    By திண்டுக்கல்  |   Published on : 27th January 2015 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு தின விழாவில் 352 பயனாளிகளுக்கு ரூ.38.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் திங்கள்கிழமை வழங்கினார்.

    மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய அவர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்யப்பட்டது. பின்னர், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 46 பேருக்கு, தமிழக முதல்வரின் பதக்கங்களையும், சிறப்பாக பணிபுரிந்த 102 அரசு அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னாள் படைவீரர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 352 பயனாளிகளுக்கு ரூ.38.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வழங்கினார்.

    குடியரசு தின விழாவையொட்டி, 800க்கும் மேற்பட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். விழாவில் திண்டுக்கல் சரக டிஐஜி என்.அறிவுச்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மு.நாகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மு.ச.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நீதிமன்றம்:மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.ராஜவேலு தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதி எம்.சுபா அன்புமணி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    காந்தி கிராம கிராமியப் பல்கலை.: விழாவுக்கு தலைமை வகித்த துணைவேந்தர் சு.நடராஜன், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள், பல்கலை. பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி: மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேயர் வி.மருதராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாநகராட்சி ஆணையர் கே.ராஜன், பொறியாளர் சி.கணேசன், நகர் நல அலுவலர் அனிதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    வர்த்தக சங்கம்: திண்டுக்கல் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், துணைத் தலைவர் ஜி.சுந்தரராஜன் கொடி ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் கே.ஆர்.மொகைதீன் முன்னிலை வகித்தார். வர்த்தக சங்கத்தின் செயலர் ஏ.பாலன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம்: அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஏ.ஆசைத்தம்பி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வர்த்தக சங்க கௌரவத் தலைவர் ஷேக் அப்துல்காதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் காளிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூஞ்சிக்கல் பகுதியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது.

    கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில், தலைவர் ராதாகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் பொன்னுத்துரை, ஊராட்சி ஆணையர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் மணிமேகலை தேசியக்கொடி ஏற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai