Enable Javscript for better performance
புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் ஆனந்தகிரிப் பகுதியிலுள்ள புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினசரி ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நடைபெற்றது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவுக்கு திரு இருதய ஆண்டவர், ஆலயப் பங்குத் தந்தை ஜோசப் செல்வராஜ் தலைமை வகித்தார். சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவில் புனித செபஸ்தியார் மின் அலங்காரத் தேர்ப்பவனி மந்திரிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. ஆனந்தகிரி, மூஞ்சிக்கல், லாஸ்காட்சாலை, அண்ணாசாலை, காமராஜர்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேர்பவனி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai