Enable Javscript for better performance
இடைநின்ற குழந்தைகள் கல்வி பெற சிறப்பு ஏற்பாடு: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    இடைநின்ற குழந்தைகள் கல்வி பெற சிறப்பு ஏற்பாடு: ஆட்சியர் தகவல்

    By திண்டுக்கல்  |   Published on : 28th January 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல், ஜன. 27: இடைநின்ற குழந்தைகள் கல்வி பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிப்பதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

    ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான கல்வியை அளிப்பதில், தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சுவர் விளம்பரங்கள், விழிப்புணர்வு பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறன்றன.

     கடந்த 2006 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, 813 குழந்தை தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள்  மீட்கப்பட்டு, சிறப்பு மையத்தில் பயிற்சி அளித்து, பின்னர் முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக தொழிற்கல்வி பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

     மாணவர்களின் வங்கி கணக்கில், மாதந்தோறும் ரூ.150 உதவித் தொகையாக செலுத்துப்படுகிறது. முறையாக பள்ளியில், அந்த மாணவர்கள் சேரும் நேரத்தில், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

     ஏற்கெனவே, 2013-14-ஆம் ஆண்டில் 2536 இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 546 பேர் 10 உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்களிலும், 387 பேர் 27 இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களிலும் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது, அனைத்து மாணவர்களும் முறையாக பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர், என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai