Enable Javscript for better performance
குடியரசு தினவிழா- Dinamani

சுடச்சுட

    

    பழனி, ஜன. 27:  பழனி அருகே பழைய ஆயக்குடி ராஜ் மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்கு நிர்வாகி பரமசிவம் தலைமை வகித்தார்.

       முன்னாள் ராணுவவீரர் முருகேசன் தேசியக்கொடி ஏற்றினார்.

     புது ஆயக்குடி மஞ்சக்காவேரி பாலம் ராஜீவ்திடலில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிக்கு ஆசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார்.  மன்ற துணைத்தலைவர் பஸ்ரூல்ஹக் தேசியக்கொடி ஏற்றினார்.

    பெரியகுளம் 

    பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் உள்ள சிடிசி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குடியரசு தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

         பள்ளித்தலைவர் பி.பாண்டியன் தலைமையில், தாளாளர் பி.ஒலிவராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாக இயக்குநர் பி.செந்தில்பிரபு, பள்ளி முதல்வர் எம்.ஏ.ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

      விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai