Enable Javscript for better performance
கொடைக்கானலில் டென்னிஸ் போட்டி: பொள்ளாச்சி வீரர் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் டென்னிஸ் போட்டி: பொள்ளாச்சி வீரர் முதலிடம்

    By கொடைக்கானல்  |   Published on : 28th January 2015 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல், ஜன, 27:  கொடைக்கானலில், தென்னிந்திய டென்னிஸ் கிளப்புகள் சார்பில் 4-ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டி நடைபெற்றது. ஒற்றையர் பிரிவில் பொள்ளாச்சி வீரர் முதலிடம் பிடித்தார்.

    கொடைக்கானல் கிளப்பில், தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் உள்ள டென்னிஸ் கிளப்கள் இணைந்து டென்னிஸ் போட்டியை நடத்தின. இப்போட்டியில் பல்வேறு டென்னிஸ் கிளப்புகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். கொடைக்கானல் கிளப் செயலர் ராகேஷ்மித்தல் தொடங்கி வைத்தார். ஒற்றையர் பிரிவு,மற்றும் இரட்டையர் பிரிவில் 3 நாள்கள் போட்டிகள் நடைபெற்றன.

    ஒற்றையர் பிரிவில், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையாமோகன் முதலிடமும், திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில் இரண்டாமிடமும் பெற்றனர்.  இரட்டையர் பிரிவில் சுப்பையா மோகன்- முருகானந்தம் ஜோடியினர் முதலிடம் பெற்றனர். இரண்டா மிடத்தை கோவையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்-செந்தில் ஜோடி பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி, கொடைக்கானல் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. கோல்ஃப் கிளப் சங்கசெயலர் மணி தலைமை வகித்தார்.  கொடைக்கானல் சுற்றுச்சூழல் தலைவர் மினுஅவாரி முன்னிலை வகித்தார்.

    கொடைக்கானல் கிளப் செயலர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் கிளப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிளப் நிர்வாக அலுவலர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai