Enable Javscript for better performance
கொடைக்கானல் வன உயிரினச் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் வன உயிரினச் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு

    By கொடைக்கானல்  |   Published on : 28th January 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல், ஜன 27: கொடைக்கானலை வன உயிரினக் கோட்டமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    தமிழக வனத்துறை, கொடைக்கானல் மலையை வன உயிரினச் சரணாலயமாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் தாண்டிக்குடி, பண்ணைக்காடு,வெள்ளகெவி ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷிடம் கோரிக்கை மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து வெள்ளகெவி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது:

    பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஆரஞ்சு,காபி,அவக்கோடா,எலுமிச்சை,கொய்யா உள்ளிட்டவைகளும்,காய்கறிகளும் விளைவிக்கப்பட்டு,  வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கெனவே வன விலங்குகளால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வனஉயிரினச் சரணாலயம் அமைந்தால்,விவசாயம் மற்றும் சுற்றுலா பாதிக்கப்படும். இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும், என்றனர்.

      கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கூறியது:

     கொடைக்கானல் மலைப் பகுதியை வன உயிரினச் சரணாலயமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும், என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai