Enable Javscript for better performance
திண்டுக்கல்லில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முடக்கி வைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி, திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

     திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் அ.தங்கவேல் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பி.டி.பிச்சை, பொதுச் செயலர்கள் ஜெ.முருகன்(மேற்கு), சி.கே.ராதாகிருஷ்ணன்(கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் சிறப்புரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியது:

    கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தை, மத்திய பாஜக அரசு முடக்கி வைத்துள்ளது. பொதுமக்களின் மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும், மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளன. காங்கிரசின் வளர்ச்சியை தடுப்பதாக நினைத்து, நாட்டின் வளர்ச்சியையும், மக்களின் முன்னேற்றத்தையும் முடக்கி வைத்துள்ளனர், என்றார் அவர்.

     அதனைத் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் மீண்டும் பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் கோஷமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai