Enable Javscript for better performance
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: நத்தத்தில் நாளை பதிவு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: நத்தத்தில் நாளை பதிவு முகாம்

    By திண்டுக்கல்  |   Published on : 28th January 2015 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல், ஜன. 27: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில், புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கு சிறப்பு விழிப்புணர்வு பதிவு முகாம் நத்தத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

    இதுகுறித்து தொழிலாளர் அலுவலர் சமூக பாதுகாப்பு திட்டம்(கூடுதல் பொறுப்பு) த.

    கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பது:

    தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜனவரி 29-ஆம் தேதி பதிவு முகாம் நடைபெறுகிறது.

    புதிய பதிவு விண்ணப்ப படிவம், குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 3 புகைப்படம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் உரிமம்(ஆட்டோ வாரியத்திற்கு மட்டும்), வங்கிச்சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai