Enable Javscript for better performance
பன்றிகள் தொல்லை: 104 மூலம் தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல், ஜன.27: பன்றி தொல்லை மிகுந்த பகுதிகள் குறித்து 104 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட உடன், அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் ஆலோசனை பெறுவதோடு, ரத்த பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். மலேரியா, டெங்கு மற்றும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலி மருத்துவர்களிடம் சென்று, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம்.

     பன்றிகளால் மூளைக் காய்ச்சல் நோய் பரவுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் குறித்து, 104 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai