Enable Javscript for better performance
பழனியில் வீடுகளில் புகுந்த கோதுமை நாகங்கள்- Dinamani

சுடச்சுட

    

    பழனி, ஜன. 27:  பழனியில் இருவேறு வீடுகளில் புகுந்த கோதுமை நாகங்கள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டன.

     பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியின் பின்புறம் உள்ள சுப்பிரமணி என்பவர் வீட்டின் சமையலறையில் செவ்வாய்க்கிழமை காலையில் பாம்பு ஒன்று இருப்பதாக,  பாம்பாட்டி நடராஜூக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற அவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.  சுமார் 6 அடி நீளமுள்ள அது கோதுமை நாகம் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதற்கு சுமார் இருபது வயதிருக்கலாம் என நடராஜ் தெரிவித்தார்.

      அதே போல அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகே உள்ள சக்திவேல் என்பவர் வீட்டிலும் நடராஜால் பாம்பு பிடிக்கப்பட்டது.  அதுவும் கோதுமைநாகம் ரகத்தை சேர்ந்ததாகும். சுமார் ஐந்தடி நீளமும் சுமார் 12 வயதும் உடையதாக இருந்தது. பிடிபட்ட  இரு நாகங்களும் வனத்துறை ரேஞ்சர் கணேசன் வசம் ஒப்படைக்கப்பட்டன.  விஷத்தன்மை மிக்க இவை, பாலாறு வனப்பகுதியில் உயிருடன் விடப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai