Enable Javscript for better performance
பழனி கோயில் உண்டியல் வரவு ரூ.1.82 கோடி- Dinamani

சுடச்சுட

    

    பழனி, ஜன. 27:  பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள், செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.1.82 கோடி கிடைத்தது.

     பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், பொங்கல் திருவிழா, குடியரசு தினத் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, கடந்த 13 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியதால், செவ்வாய்க்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.

    இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 82 லட்சத்து 85 ஆயிரத்து 637 கிடைத்தது. பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, சங்கிலி, வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன குடம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 665 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 350 கிராமும் கிடைத்தன.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 466 வரப்பெற்றன.

     உண்டியல் எண்ணிக்கையின்போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்டோர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai