Enable Javscript for better performance
பொதுமக்களின் சுகாதாரம் குறித்து ஆய்வு அறிக்கை: சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்களின் சுகாதாரம் குறித்து ஆய்வு அறிக்கை: சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவு

    By திண்டுக்கல்  |   Published on : 28th January 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல், ஜன. 27: பொதுமக்களின் சுகாதார நிலை குறித்து, சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

    டெங்கு தடுப்பு பணிகள் குறித்து சுகாதார துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசியது:

     சுகாதாரத்துறை அலுவலர்கள், அனைத்து இடங்களுக்கும் நேரடியாக சென்று களப் பணிகள் நடத்தி, பொதுமக்களின் சுகாதார நிலை குறித்து ஆய்வு அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

     அரசு மருத்துவமனையில், மேற்கொள்ளப்படும் கண்சிகிச்சை குறித்து, கிராமப்புற மக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பணி நேரத்தில், குறிப்பிட்ட மருத்துவனைகளில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    ஜனவரி 30-ஆம் தேதி திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமணைகளில், ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகளில், சுகாதாரத்துறையினர் ஈடுபட வேண்டும், என்றார்.

    இக்கூட்டத்தில், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் எம்.ரவிக்கலா, துணை இயக்குநர் வரதராஜன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்(பொறுப்பு) எஸ்.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai