Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      தாலுகா அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் கருப்புச்சாமி தலைமை வகித்தார்.  நகர்குழு செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், அருள்செல்வன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.  தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் கந்தசாமி, ஒன்றியக்குழு கமலக்கண்ணன், மாயவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai