Enable Javscript for better performance
முதியோர் உதவித்தொகை கோரி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் உதவித்தொகை கோரி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

    By திண்டுக்கல்  |   Published on : 28th January 2015 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல், ஜன. 27: முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

     திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை வகித்தார்.

     ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் உதவித்தொகை வழங்க கோரி, கோஷங்கள் எழுப்பினர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், எம்எல்ஏ தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்ட பேரணியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் என்.பாண்டி தொடங்கி வைத்தார். பேரணியாக சென்றவர்கள், கோட்டாட்சியர் ரா.ஜா.உத்தமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.   இந்த ஆர்ப்பாட்டம், பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.குமரவேல், எம்.ஆர்.முத்துச்சாமி, வ.கல்யாணசுந்தரம், கே.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai