Enable Javscript for better performance
வத்தலகுண்டு ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வத்தலகுண்டு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள 17 கிராம ஊராட்சிகளில்  திங்கள்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டங்களில், கருவேல மரங்களை அழித்தல், தனிநபர் கழிப்பறை கட்டித்தரும் திட்டம், டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபடுதல்,பசுமை வீடுகள் திட்டப் பயனாளிகளை தேர்வு செய்தல் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி, 100 நாள் வேலை திட்டங்களில் உள்ளவர்களை கிராம ஊராட்சியில்  உள்ள கட்டட வேலையான சமுதாய கூடம், நாடகமேடை ஆகியவற்றுக்குப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுமக்களுக்கு படித்துக் காண்பிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. அந்தந்த ஊராட்சிக் கூட்டங்களில் வேலை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இக்கூட்டங்களை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    கோம்பைபட்டி: இந்த  ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற சின்னுப்பட்டி கிராமமக்கள், தங்கள் கிராமத்துக்கு சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும். இல்லையேல் இனிமேல் கிராமசபைக் கூட்டங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம், என்றனர். இகூட்டத்திற்கு வந்த மேலக்கோவில்பட்டி பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் ஊருக்குள் பள்ளி செல்லும் நேரத்திற்கு வந்து சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai