Enable Javscript for better performance
வத்தலகுண்டு பகுதியில் குடியரசு தினவிழா- Dinamani

சுடச்சுட

    

    வத்தலகுண்டு, ஜன. 27: வத்தலகுண்டு பகுதியில், அரசு மற்றும் அரசு சார்பு அலுவலகங்களில் குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு,  ஊராட்சி ஒன்றியத்தலைவர் ஆர்.மோகன் தலைமை வகித்து, கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சிவந்தபெருமாள், ஆணையாளர் காதர்மீர், கூட்டுறவுத்தலைவர் துரைராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு, பேரூராட்சித்தலைவர் சுசித்ராபாண்டியன் தலைமை வகித்து, கொடி ஏற்றினார். ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூராட்சி துணைத்தலைவர் பீர்முகமது, செயல் அலுவலர் கமர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலகுண்டு கூட்டுறவு பண்டகசாலையில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு, தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெபராஜ், செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலகுண்டு கூட்டுறவு நகர வங்கியில் நடந்த விழாவிற்கு, தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து, கொடி ஏற்றினார். துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இயக்குனர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai