Enable Javscript for better performance
தேவாலயத்தில் துடைப்பங்களை காணிக்கையாக செலுத்தும் விநோத வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தேவாலயத்தில் துடைப்பங்களை காணிக்கையாக செலுத்தும் விநோத வழிபாடு

    By திண்டுக்கல்  |   Published on : 11th April 2016 02:47 AM  |   அ+அ அ-   |  

    தோல் நோய்களை தீர்க்க வேண்டி, தேவாலயத்தில் துடைப்பங்களை காணிக்கையாகச் செலுத்தும் விநோத வழிபாடு, திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

       திண்டுக்கல் அடுத்துள்ள சிறுநாயக்கன்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலயப் பெருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தோமையார் கரடு பகுதியில் அமைந்துள்ள புனித தோமையார் திருத்தலத்திலும் கொடியேற்றம் நடைபெற்றது.   புனித தோமையார் திருத்தலத்தில் வழிபாடு செய்தால், தோல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதற்காக ஆண்டுதோறும் புனித தோமையார் ஆலய திருவிழாவின்போது, துடைப்பங்களை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழாவில், திண்டுக்கல் மறைமாவட்ட பரிபாலகர் கே.எஸ். ஆரோக்கியசாமி தலைமையில், தோல் வியாதிகளிலிருந்து குணமளிக்கும் வேண்டுதல் திருப்பலி நடைபெற்றது.    பின்னர், துடைப்பங்களை நேர்த்திக்கடனாகச் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பிற்பகலில், புனித தோமையாரின் சப்பர பவனி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai