Enable Javscript for better performance
அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக, அதிமுகவினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

       பழனியில் புதன்கிழமை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், அடிவாரத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், எம்எல்ஏ. வேணுகோபாலு, வேட்பாளர் குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

       இக்கூட்டத்துக்கு, அக்கட்சியினர் ஏராளமானோர் வேன்களில் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, ஆள்களை வேனில் அழைத்து வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக, அதிமுக நகரச் செயலர் முருகானந்தம், ஆர்எம்டிசி மாரியப்பன், தொகுதி செயலர் மகுடீஸ்வரன், செல்வம் ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் சம்பந்தமாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai