Enable Javscript for better performance
கொடைக்கானல் சிறுவர் பூங்கா மீண்டும் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் சிறுவர் பூங்கா மீண்டும் திறப்பு

    By கொடைக்கானல்  |   Published on : 15th April 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தினமணி செய்தி எதிரொலியாக, கொடைக்கானலில் மீண்டும் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான சிறுவர் பூங்காவை, தனியார் ஏலம் எடுத்து நுழைவுக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 5 வசூலித்து வந்தனர். இதனிடையே, சிறுவர் பூங்காவிலுள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் பொம்மைகள், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்கள் சேதமடைந்திருந்ததால், சிறுவர்கள் விளையாட முடியாத நிலை இருந்து வந்தது.

      எனவே, குத்தகைதாரர் சேதமடைந்திருந்த பொருள்களை சரிசெய்து தரும்படி நகராட்சியிடம் கோரியுள்ளார். ஆனால், கடந்த 4 ஆம் தேதி கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் சிறுவர் பூங்காவை திடீரென பூட்டி சீல் வைத்தனர். இதனால், கொடைக்கானலுக்கு குழந்தைகளுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

      இது குறித்து, புதன்கிழமை தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டது.

     அதன் எதிரொலியாக, மீண்டும் நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

      இது தொடர்பாக, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டுப் பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருள்கள் சேதமடைந்துள்ளதை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும்.

     தற்போது, புதன்கிழமை முதல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai