Enable Javscript for better performance
துர்முகி ஆண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    துர்முகி ஆண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By திண்டுக்கல்  |   Published on : 15th April 2016 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீதுர்முகி தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

       திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவார சீனிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

      திண்டுக்கல்-செந்துறை சாலையில் அமைந்துள்ள திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலிலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, சின்னாளப்பட்டி அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோயில் மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

      தொடர்ந்து, சின்னாளப்பட்டி ஆஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 10,008 பழக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாச்சி, மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா, திராட்சை, செரி, அத்தி உள்ளிட்ட பழங்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.   அனுமனுக்கு பிடித்தமான பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்தால், நினைத்த  காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். மேலும், பல விதமான பழங்களை ஒருசேர பார்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும் என்பதால், சுவாமியின் திருமேனி முழுவதும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதாக, கோயில் நிர்வாகி சுந்தரராஜ் தெரிவித்தார்.

      தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அனைத்து கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai