Enable Javscript for better performance
பழனியில் உலக சித்தர் தினவிழா- Dinamani

சுடச்சுட

    

    பழனி பாரம்பரிய சித்த மருத்துவர் நலச்சங்கம் சார்பில் உலக சித்தர் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

      பழனி பழைய தாராபுரம் சாலையில் உள்ள அகிலிகா யோகா மற்றும் ஹெர்பல் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்ஆர்எப். சிவசாமி தலைமை வகித்தார்.  தேனி மாவட்டம் கூடலூர் மகாசக்தி பீடம் சுந்தரவடிவேல் சுவாமிகள் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் மாதாகுருஜி தலைமையில் போகர் உருவப்படம் திறக்கப்பட்டது. சங்கச் செயலாளர் கண்ணபிரான், பொருளாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வனஅலுவலர் தாருகாவனன், பார்த்தசாரதி, ஜோதிடர் மகேஷ்வரி, வேளாண்துறை அலுவலர் பேபிராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் ஏராளமான சித்த மருத்துவர்கள் பங்கேற்று சித்த மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்தனர். மூலிகைகள் மற்றும் அவைகள் மூலம் மருந்து தயாரித்தல் குறித்து செய்முறை விளக்கமும் வழங்கினர்.  பாஷாணங்களை க்கொண்டு மருந்து தயாரித்தல், கல்பம், பொடிகளால் நீங்கும் நோய்கள் குறித்தும் சித்தர்கள் பாரம்பரியத்தில் அவற்றை உண்ணும் விதம் குறித்தும் மருத்துவர்கள் விவரித்தனர். விழா நிறைவில் சித்த மருத்துவ பயிற்சி முடித்தோர்க்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் சங்க துணை தலைவர் பாலன், துணை செயலாளர் குருபரன்ஜி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai