Enable Javscript for better performance
பழனி மலைக் கோயில் ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி மலைக் கோயில் ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

    By பழனி  |   Published on : 15th April 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

       தமிழ் புத்தாண்டையொட்டி, மலைக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள்  படிவழிப் பாதையில் சென்றனர். இருப்பினும், விஞ்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் டிக்கெட் பெற்று மலைக் கோயிலை அடைந்தனர்.

       மலைக் கோயிலிலும் கட்டணம், இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து, மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். 

      பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்காவடி, மயில்பீலி காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்திருந்தனர். மலைக் கோயிலில் உள்ள போகர் சன்னதியில் மரகத லிங்கத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

       தொடர்ந்து, அருள்மிகு ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai