Enable Javscript for better performance
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் சாவு: போலீஸ் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் சாவு: போலீஸ் விசாரணை

    By DIN  |   Published on : 10th December 2016 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர் தரப்பில் போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள கலிக்கம்பட்டியைச் சேர்ந்த அருள்ராஜ் மனைவி ஆரோக்கியமேரி (27). இவர்களது மகன் ஞானப்பிரகாசம் (2). கடந்த சில மாதங்களுக்கு முன் அருள்ராஜ் உயிரிழந்து விட்டார். இதையடுத்து, ஆரோக்கியமேரி தனது மகனுடன் தந்தை யாகப்பன் வீட்டில் வசித்து வந்தார்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஞானப்பிரகாசத்தை காணாமல் ஆரோக்கியமேரி தேடியுள்ளார். அப்போது, அங்கிருந்த 2 அடி தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் விழுந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்துவிட்டதாக அங்கு தெரிவித்துள்ளனர்.
    இதனிடையே இறந்து போன அருள்ராஜின் தாயார் பாத்திமாமேரி, ஞானப்பிரகாசம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அம்பாத்துரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai