சுடச்சுட

  

  பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேரக் கூடாது: எஸ்டிபிஜ கட்சி வலியுறுத்தல்

  By திண்டுக்கல்  |   Published on : 22nd February 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கக் கூடாது என, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹலான் பாகவி விஜயகாந்தை வலியுறுத்தியுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு எஸ்டிபிஐ கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. எஸ்டிபிஐ இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றிபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது.

   ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும். இந்த விவகாரத்தில், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. திமுக ஆட்சியில் அறிவித்த திட்டம் என்பதற்காகவே, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

   மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின், தேர்தல் கூட்டணி குறித்து 2 நாள்களில் முடிவு செய்வோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai