Enable Javscript for better performance
கொடுஞ் செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி: 15 ஆண்டுகளுக்குப் பின் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றியது அதிமுக- Dinamani

சுடச்சுட

    

    கொடுஞ் செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி: 15 ஆண்டுகளுக்குப் பின் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றியது அதிமுக

    By திண்டுக்கல்  |   Published on : 21st May 2016 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    15 ஆண்டுகளுக்குப் பின் திண்டுக்கல் தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

     கடந்த 2001இல் அதிமுக கூட்டணியிலும், 2006இல் திமுக கூட்டணியிலும், 2011இல் மீண்டும் அதிமுக கூட்டணியிலும் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த 3 முறையும் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட கே.பாலபாரதியே வெற்றி பெற்றிருந்தார். கூட்டணி கட்சியாக இருந்த போதிலும், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி மட்டுமே வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், 15 ஆண்டு காலம் திண்டுக்கல் தொகுதியில் பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை என்பது தொகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

     இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ள அதிமுக வேட்பாளரான சி.சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், முதன் முறையாக சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர். இதன் மூலம், திண்டுக்கல் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     திண்டுக்கல் தொகுதியின் பிரதான பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புறவழிச்சாலையையொட்டி புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமை அடையச் செய்து, சாலைகளை சீரமைக்க வேண்டும்.

     மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திண்டுக்கல்லை, மதுரை, திருச்சி, திருப்பூர் மாநகர்களைப் போல், மேப்படுத்த வேண்டும். கைவிடப்பட்ட திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். திண்டுக்கல் நகரில் பொதுக்கூட்டம், கலைவிழா, கண்காட்சி போன்றவற்றை நடத்த இடவசதி இல்லை. எனவே காந்தி மைதானத்தை (காய்கறி சந்தையை மாற்றி விட்டு) அங்கு இட வசதி செய்து தர வேண்டும்.

     திண்டுக்கல் சிட்கோ தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. முதன்முறையாக பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.சீனிவாசன் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai