Enable Javscript for better performance
ஆந்திரத்திலிருந்து சைக்கிளில் வந்த ஐயப்ப பக்தர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்திலிருந்து சைக்கிளில் வந்த ஐயப்ப பக்தர்கள்

    By DIN  |   Published on : 28th November 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலத்திலிருந்து சைக்கிளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை வத்தலகுண்டை அடைந்தனர்.
      ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களான சௌத்திரி, நாயுடு ஆகிய இருவரும், கடந்த 16 ஆம் தேதி (கார்த்திகை 1) ஐயப்பனுக்கு மாலை அணிந்து அன்றே சைக்கிளில் சபரிமலை நோக்கி பயணமாகினர். இவர்கள், ஞாயிற்றுக்கிழமை வத்தலகுண்டு வழியாகச் சென்றனர். அப்போது, ஆந்திராவிலிருந்து சுமார் 1400 கி.மீ. தொலைவு சைக்கிளில் பயணம் செய்து வருவதாகவும், நவம்பர் 30 ஆம் தேதி சபரிமலை சென்றடைந்து சுவாமியை தரிசனம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai