Enable Javscript for better performance
கொடைக்கானல் ஏ.டி.எம். மையங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் ஏ.டி.எம். மையங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

    By DIN  |   Published on : 28th November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் ஏ.டி.எம். மையங்களில் பணம் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனர்.
       கொடைக்கானலுக்கு கடந்த 2 நாள்களாக தமிழகம் மட்டுமல்லாமல், கேரளம், மும்பை, கர்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
       இவர்கள், செவன் ரோடு, அண்ணாசாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் பெறுவதற்காக சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். ஒரு சில ஏ.டி.எம். மையங்களைத் தவிர, மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தததால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
      இது குறித்து, கொடைக்கானலில் உள்ள ஒரு வங்கியின் அலுவலர் கூறுகையில், வங்கிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை என்பதாலும், பணம் பற்றாக்குறை காரணத்தாலும், ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்க இயலவில்லை என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai