Enable Javscript for better performance
நத்தம் அருகே கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் அருகே கயிறு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
     நத்தம் அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதில், தனஞ்செய் என்பவரது கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், ரூ. 10 லட்சம் மதிப்பிலான கயிறு மற்றும் கயிறு திரிக்கும் இயந்திரங்கள் தீயில் கருதி சேதமடைந்தன.  தீ விபத்துக்கான காரணம் குறித்து, சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai