Enable Javscript for better performance
பைக்கிலிருந்து கீழே விழுந்த தச்சு தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த தச்சு தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
       திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரசப்பபிள்ளைபட்டியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி கருப்புச்சாமி (45). இவர், நவம்பர் 21 ஆம் தேதி தச்சு வேலையை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளார்.
     பழனி-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை அரசப்பபிள்ளைபட்டி ரயில் கடவுப் பாதை அருகே சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து வாகனத்திலிருந்து  கீழே விழுந்துள்ளார். அதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     இது குறித்து, ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai