Enable Javscript for better performance
மனிதாபிமான சிந்தனை எல்லா காலங்களிலும் தொடரவேண்டும்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    மனிதாபிமான சிந்தனை எல்லா காலங்களிலும் தொடரவேண்டும்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 28th November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரிடர் துயரங்களின்போது மக்களிடையே ஏற்படும் மனிதாபிமான சிந்தனையானது, எல்லா காலங்களிலும் தொடரவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்தார்.
    திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மதநல்லிணக்க வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியர் டி.ஜி. வினய் பேசியதாவது:
    மத ரீதியிலான மோதல்களை தவிர்த்து, சமூகப் பொருளாதார முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்பை விதைத்தால் அது இருமடங்காக பலன் கொடுக்கும் என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு. அதற்கேற்ப சமுதாயத்தில் அமைதி என்ற ஒளி பரவுவதற்கு மத நல்லிணக்கம் மற்றும் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்.  சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் நிகழும்போது, சாதி, மத வேறுபாடின்றி மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் தரப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த மனிதாபிமானம் எல்லா காலங்களிலும் தொடர வேண்டும்.  பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தி மத நல்லிணக்கம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில், கே.ஏ.ஆர். முஹைதீன், கோ. சுந்தராஜன், என்.எம்.பி. காஜாமைதீன், என். சாகுல்ஹமீது, எஸ். சண்முகம், அருட்தந்தை ஜோ. மைக்கேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai