Enable Javscript for better performance
ஓவியத் தேர்வில் 321 பேர் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓவியத் தேர்வில் 321 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    ஓவியம், தையல், இசை, நடனம் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பத் தேர்வுகள் கடந்த 2015 நவம்பர் மாதம் நடைபெற்றன. இதில், ஓவியத் தேர்வை மட்டும் 1,198 பேர் தமிழகம் முழுவதும் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள், கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டதில், ஓவியத் தேர்வில் 321 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    இதுதொடர்பாக தமிழ்நாடு ஓவிய ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் நல்லகாசிராஜன் தெரிவித்துள்ளது: தேர்வு எழுதிய மையங்களில், தேர்ச்சிப் பெற்றவர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு தகவல் கடிதம் மட்டுமே வழங்கப்படும். சான்றிதழ் விநியோகம் செய்ய 10 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பப்பட்டு விடும் என்பதால், திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் திண்டுக்கல் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு உடனடியாகச் சென்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai