Enable Javscript for better performance
காந்தி கிராம கிராமியப் பல்கலை. நிறுவனரின் 113 ஆவது பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    காந்தி கிராம கிராமியப் பல்கலை. நிறுவனரின் 113 ஆவது பிறந்தநாள் விழா

    By DIN  |   Published on : 08th October 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் நிறுவனரும், முன்னாள் துணைவேந்தருமான ஜி.ராமச்சந்திரனின் 113 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் காந்திய சிந்தனைத் துறை மற்றும் குருகுல அமைப்பின் சார்பில், ராமச்சந்திரனின் நினைவிடத்தில் சர்வ சமய பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
    இதைத் தொடர்ந்து வெள்ளிவிழா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் துணைவேந்தர் ஜி.பங்கஜம் கலந்து கொண்டார்.
    அப்போது துணைவேந்தர் சு.நடராஜன் பேசியதாவது: கிராமப்புற மக்கள், குறிப்பாக மாணவர்கள் உயர்வு பெற வேண்டும் என்ற நோக்கில், காந்தி கிராம கிராமிய பயிற்சி நிறுவனத்தை தொடங்கியவர் ராமச்சந்திரன். அவரது தத்துவங்களையும், சிந்தனைகளையும், சமுதாயப் பணிகளையும் மாணவர்கள் புரிந்து கொண்டால், உறுதியாக எதிர்காலத்தில் தலைசிறந்த குடிமகனாக உருவாக முடியும் என்றார்.
    நிகழ்ச்சியில், பதிவாளர் (பொ) நாராயணசாமி, பேராசிரியர் ஜி.பழனித்துரை, புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai