Enable Javscript for better performance
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி : 1300 மாணவர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி : 1300 மாணவர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 08th October 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில், 40 பள்ளிகளைச் சேர்ந்த 1300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை ஷகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான 3 ஆவது தடகளப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இப்போட்டியில், திண்டுக்கல், மணப்பாறை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். மதுரை ஷகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவரும், மதுரை மகாத்மா மாண்டீசோரி பள்ளியின் தாளாளருமான ஹம்சப்ரியா முன்னிலை வகித்தார். 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ. ஓட்டம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இருபாலருக்கும் தனித் தனியே நடைபெற்ற இப்போட்டிகளில், 750 மாணவர்கள், 550 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai