Enable Javscript for better performance
சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித் தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூலித் தொழிலாளியை, வடமதுரை மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள சின்னராவுத்தன்பட்டி எட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வே.பாலசுப்பிரமணி (40). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலசுப்பிரமணி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், பாலசுப்பிரமணியை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai