Enable Javscript for better performance
தடுப்பணை கட்டும் பணி: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கொடகனாறு மற்றும் பரப்பலாறு பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    திண்டுக்கல் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில், கொடகனாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் வினய் தெரிவித்ததாவது:
    அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில், நீர்தேங்கும் போது சுற்றுப்புறங்களில் உள்ள 177 கிணறுகள் நீரேற்றம் பெறும். மேலும் தாடிக்கொம்பு மற்றும் அகரம் பகுதிகளில் சுமார் 450 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க பொதுப் பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
    ஆய்வின் போது செயற்பொறியாளர் (நஞ்காஞ்சியார்) பெ.ஜெயராமன், உதவி பொறியாளர்கள் எஸ்.நீதிபதி, பி.கோகுலகண்ணன், வட்டாட்சியர்கள் தசாவதாரம் (வேடசந்தூர்), மாரிமுத்து (ஒட்டன்சத்திரம்) ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai