Enable Javscript for better performance
அஞ்சல் வில்லை கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    தேனி அருகே முத்துத்தேவன்பட்டி சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளியில் தேனி அஞ்சல் கோட்டம் சார்பில் அஞ்சல் வார விழாவையொட்டி வியாழக்கிழமை அஞ்சல் வில்லை கண்காட்சி நடைபெற்றது.
     தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். தேனியைச் சேர்ந்த விஜயநாராயணசாமி என்பவர் சேமித்து வைத்திருந்த 1800-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அஞ்சல் வில்லைகள் கண்காட்சியில் இடம்  பெற்றிருந்தன. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலகங்களின் செயல்பாடு, மை ஸ்டாம்ப் திட்டம், சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டங்கள் குறித்து அஞ்சல் கோட்ட அலுவலர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி அஞ்சல் கோட்ட வணிக அலுவலர் முருகானந்தம் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai