Enable Javscript for better performance
இடும்பன்குளத்தில் ஆக்கிரமிப்பு விவசாயத்தை அகற்ற கால அவகாசம் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    இடும்பன்குளத்தில் ஆக்கிரமிப்பு விவசாயத்தை அகற்ற கால அவகாசம் கோரி மனு

    By DIN  |   Published on : 15th October 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி இடும்பன்குளத்தில் ஆக்கிரமிப்பு விவசாயத்தை அகற்றிக் கொள்ள கால அவகாசம் கோரி வியாழக்கிழமை விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் வந்திருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள், செயற்பொறியாளர் ஜெயராம், உதவி செயற்பொறியாளர் முருகன் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
      அதில், இடும்பன் குளத்தில் வெள்ளரி போன்ற செடிகளை நட்டு தற்போது பலன் தரும் நிலையில் அவற்றை அழிப்பதால் எங்களுக்கு இழப்பு ஏற்படும்.
    சில நாள்கள் அவகாசம் கொடுத்தால் அவற்றின் பலனை எடுத்தவுடன் அகற்றிக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்திருந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai