Enable Javscript for better performance
சரிவர மூடப்படாத பள்ளங்களால் விபத்து அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் நகரில் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஒரேநாளில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கித் தவித்தன.
    பெரியகுளத்தில் புதிய குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடைக்கான குழாய் தோண்டும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. நான்கு மாதங்களுக்கு பிறகு பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஓரளவு மழை பெய்தது. இதனால் நகர் பகுதி குளிர்ந்தது. ஆனால் குழாய் பதிக்கவும், பாதாள சாக்கடைக்கும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாததால் பள்ளம் ஏற்பட்டது. பள்ளங்களில் பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன.  வெள்ளிக்கிழமை காலை குழந்தைகளுடன் வந்த பள்ளி வாகனம் வடக்கு அக்ரஹார நுழைவுப் பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கி கவிழும் நிலை ஏற்பட்டது. ஓட்டுநரின் திறமையால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வாகனத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். இதே போல் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பள்ளங்களில் சிக்கித் தவித்தன. பள்ளங்கள் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படும் பகுதியை கண்டறிந்து கூடுதல் மண்ணை போட்டு நகராட்சி நிர்வாகம் சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai