Enable Javscript for better performance
சாணார்பட்டி அருகே 56 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 56 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வீட்டில் மராமத்து பணிகள் நடைபெறுவதால், திண்டுக்கல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது உறவினர் ரங்கசாமி என்பவர், அந்த வீட்டில் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ரங்கசாமி, திண்டுக்கல்லில் உள்ள செல்வராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் மேட்டுக்கடை வீட்டுக்குச் சென்ற போது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் நகைகளை மர்ம நபர்கள திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. சாணார்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai