Enable Javscript for better performance
செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவில் மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவில் மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

    By DIN  |   Published on : 15th October 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி அருகே செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
     இக்கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை (அக். 11) தொடங்கியது. முதல் நாள் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் கரகம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை பறவைக் காவடி எடுத்தல், அலகு குத்தி காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர் ஒருவர் 15 அடி நீள அலகு குத்தி காவடி எடுத்து வந்தார். மாலையில் மழை வேண்டி 108 பெண்கள் செட்டிகுளம் கண்மாயில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
     வெள்ளிக்கிழமை அதிகாலை கரகம் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai