Enable Javscript for better performance
திண்டுக்கல்லில் உலக பேரிடர் தடுப்புத் தின பேரணி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்லில், உலக பேரிடர் தடுப்புத் தினத்தையொட்டி, பேரிடர் காலங்களில் மீட்புபணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் டிஜி.வினய் தொடங்கி வைத்து பேசும் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலங்களில் பேரிடர் மேலாண்மை சிறப்புக் கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 24மணி நேரமும் செயல்படும் இந்த மையங்களுக்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதன் மூலம், ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை துரிதமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
     விழிப்புணர்வு பேரணியைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில், பேரிடர் காலங்களில் மீட்புப்பணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண் சத்யா, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai