Enable Javscript for better performance
பழனியில் இயந்திரம் மூலம் நெல்நடவு தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
     இங்குள்ள பாலமுருகன் என்பவர் வயலில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர நெல் நடவு நிகழ்ச்சியை பழனி சார்- ஆட்சியர் வினீத், திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் தங்கச்சாமி மற்றும் பழனி வேளாண்மை உதவி இயக்குநர் சுருளியப்பன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அப்போது, இயந்திர நடவால் நெல் நாற்று நடும் நேரம் குறைவதோடு, அதிக பரப்பில் நெல் நடவுக்கு இயந்திரம் உதவுவது குறித்தும், மானியங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
     மேலும், விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும், அதற்கான திட்டத்தில் சேர மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், மானியங்கள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் மீனாகுமாரி, மதுரை வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி மாணவிகள் அபிநயா, சந்தியா, தனலட்சுமி, இலக்கியா, நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai