Enable Javscript for better performance
பெரியகுளத்தில் கையெழுத்து இயக்க பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களை இணைத்து விநியோகம் செய்யக் கோரி கையெழுத்து இயக்க பிரசாரம் சிறுதானிய கூட்டமைப்பு சார்பில் பெரியகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     இதற்கு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா தேவி தலைமை வகித்தார். கையெழுத்து இயக்க பிரசாரத்ததை பெரியகுளம் லயன்ஸ் கிளப் தலைவர் என்.நௌசாத் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் பாண்டியன், வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிவண்
    ணன், செயலர் ராஜவேல், லாரி உரிமையாளர்கள் சங்க  மாநில நிர்வாகி நஸீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     இதில் தமிழகத்தில் அதிக அளவு சிறுதானியங்கள் விளைக்கப்படுவதால், அவற்றை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்ய வேண்டும். மேலும் சிறுதானிய விவசாயத்தை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என கூறி மத்திய அரசுக்கு 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai