Enable Javscript for better performance
பெரியாறு அணை நீர்மட்டம் 109.80 அடியாக சரிவு- Dinamani

சுடச்சுட

    

    முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 109.80 அடியாக சரிந்ததால், அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 255 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
     முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு விநாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணை நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில், கடந்த செப். 9-ஆம் தேதி முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் விநாடிக்கு 300 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து 109.80 அடியாக சரிந்தது. அணையில் தண்ணீர் இருப்பு 880 மில்லியன் கன அடி. பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் தேக்கடியில் மிதமான மழை பொழிவு இருந்தும் அணைக்கு நீர் வரத்து இல்லை. எனவே அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 255 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai