Enable Javscript for better performance
பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியில் வியாழக்கிழமை பேருந்தில் இருந்து இறங்க முயன்றவர் சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    தேனி, பவர் ஹவுஸ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பிரகாஷ் (48). இவர், தேனியில் இருந்து அரப்படித்தேவன்பட்டிக்கு அரசு நகர பேருந்தில் சென்றுள்ளார். அரப்படித்தேவன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து கீழ இறங்க முயன்ற பிரகாஷ், சாலை வளைவில் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பிரகாஷ் மகன் பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில் பேருந்து ஓட்டுநர் வீரபாண்டியைச் சேர்ந்த செங்கல்மடை அய்யனார் மகன் வேல்முருகன் (44) மீது க.விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai