Enable Javscript for better performance
மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க வனத்துறை உறுதி- Dinamani

சுடச்சுட

    

    மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க வனத்துறை உறுதி

    By DIN  |   Published on : 15th October 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் மலை மாடுகளுக்கு வனப் பகுதியில் மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து அக். 30-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தெரிவித்தார்.
     தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வனத் துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன் முன்னிலையும் வகித்தனர்.  இதில், மாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் டி.கண்ணன், மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத் தலைவர் பெனிட்டோ பவுல்ராஜ் ஆகியோர் வலியுறுத்தினர்.  மேலும் மலையடிவாரங்களில் உள்ள பட்டா நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு தோட்டக் கலைத் துறை சார்பில் பரிந்துரை செய்யப்படும் இழப்பீட்டுத் தொகையை வனத்துறை வழங்குவதில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
     இதற்கு பதிலளித்து மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து பேசுகையில், முதன்மை வனக் காப்பாளரிடம் ஆலோசனை பெற்று அக். 30-ஆம் தேதிக்குள் வனப்பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள இழப்பீடு வழங்கப்படுகிறது.  இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லையென்றால் விவசாயிகள் மேல்முறையீட்டு மனு அளிக்கலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai