Enable Javscript for better performance
வைகை அணை நீர்மட்டம் சரிவு: குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வைகை அணை நீர்மட்டம் சரிவு: குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைகை அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளது.
     தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வைகை அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 23.50 அடியாக குறைந்துள்ளது. இங்கிருந்து மதுரை மற்றும் ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
    தற்போது அணையிலுள்ள 23.49 அடி நீரில் 3.50 அடி தண்ணீர் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது.
      இதனை சுமார் 5 நாள்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வியாழக்கிழமை முதல் 40 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும் போது, தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஓரளவு பலத்த மழை பெய்துள்ளது.
     தொடர்ந்து மழை பெய்தால் வைகை அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டு, நீர்மட்டம் உயரும். இதனால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
     இல்லையேல் குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai