Enable Javscript for better performance
ஹைவேவிஸ் மலைச்சாலை விரிவாக்கப் பணி மீண்டும் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஹைவேவிஸ் மலைச்சாலை விரிவாக்கப் பணி மீண்டும் நிறுத்தம்

    By DIN  |   Published on : 15th October 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைச்சாலை விரிவாக்கப் பணிகள் வனத்துறையினரின் தொடர் கெடுபிடியால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.
     இச்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் குண்டும் குழியுமாகி அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. இதையடுத்து ரூ.80.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கினர்.
     இப்பணிகளால் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இயற்கை வளங்களும் பதிக்கும் எனக் கூறி சாலை அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி சென்னை பசுமை தீர்ப்பாயமும் இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்க அனுமதி பெற்று பணிகள் மீண்டும் தொடங்கின. அக். 7 ஆம் தேதி மண்டல வனப்பாதுப்பு அலுவலர் நிகார்ரஞ்சன் அப்பகுதியை பார்வையிட்டதில் விதிமுறைகளை மீறி சாலை அமைப்பதாக கூறி பணிகளை நிறுத்த வேண்டும் என்றார். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் வனத்துறையினர் விதிகளை மீறி சாலை அமைப்பதாக மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலத்திடம் கூறியதை தொடர்ந்து தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai