திண்டுக்கல் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி புதன்கிழமை நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள கவராயப்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயில் கோயில் வைகாசித் திருவிழா கடந்த 30ஆம் தேதி சாமிசாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை பக்தர்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தனர். பின்னர் அவர்கள் அக்னிச்சட்டி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இவ்விழாவில் சாணார்பட்டி சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.